கொரோனா தொற்று பரவல் மற்றும் தனிமைப்படுத்தும் உரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு கொட்டும் மழையில் கொட்டகலை பிரதேசசபையால் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் அவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை ஆகில் தோட்டத்தில் நாட்கூலிக்கு வேலை செய்து வந்து தற்போது வாழ்தாரத்தினை இழந்த 150 குடும்பங்களுக்கு இன்று (01) ஆகில் அம்மன் ஆலயத்தில் வைத்து பெற்றுக்கொடுக்கப்பட்டன.
குறித்த நிவாரண பொதியில் அரசி மா,பருப்பு ,நூல்டஸ் சினி,உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் அடங்குகின்றன.
கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட ஆகில் தோட்டத்திலேயே அதிகமானவர்கள் நாட் கூலி தொழிலில் ஈடுபடுவதாகவும் கொரோனா தொற்று பரவல் மற்றும் தனிடைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் காரணமாக பலர் வாழ்தாரத்தினை இழந்து வாழ வழியின்றி இருப்பதாகவும் இது குறித்த ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்த போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்குமாறும் அபிவிருத்திகள் தற்போது தள்ளி வைத்துவிட்டு மக்களை பாதுக்காக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ்,அமைப்பாளர் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்துனர்.
கே.சுந்தரலிங்கம்