கொண்டகெல தோட்ட பாலர் பாடசாலைக்கு வாயில் மற்றும் வேலி புனரமைத்துக்கொடுக்க பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கொண்டகெல தோட்ட பாலர் பாடசாலை பிரதான போக்குவரத்து வீதிக்கு அருகாமையில் உள்ளதால் சிறுவர் பாதுகாப்பு கருதி வாயில் மற்றும் வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகளை செந்தில் தொண்டமான் மேற்கொண்டுள்ளார்.
மேலும் இவ்வேலைத்திட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன்,விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.