முடி உதிர்வு பிரச்சினையானது ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருக்குமே ஏற்படுகின்றது.இயற்கையாவே சிலருக்கு முடி உதிர்வு ஏற்படலாம் எனினும் அதிகளவில் முடி உதிர்வது கவலையை ஏற்படுத்துகிறது.
முடி உதிர்விற்கான காரணங்கள்
மன அழுத்தம், வைட்டமின் டி3, பி, பி12, இரும்பு அல்லது ஃபெரிடின் அளவுகள் குறைபாடு, ஊட்டச்சத்துக்கள் குறைவு, இரசாயனங்கள் அதிகம் கலந்த ஷாம்பு பயன்படுத்தல் போன்றவற்றினால் முடி உதிர்வடைகின்றது என கூறப்படுகின்றது.
முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தும் இரசாயன பதார்த்தங்கள், போன்றவையும் தற்காலிக தீர்வாகவே காணப்படும்.எனவே இயற்கையான முறையில் செலவில்லாமல் வீட்டிலுள்ள பொருள் ஒன்றை வைத்து முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.
எல்லோரது வீட்டிலும் சமையலுக்காக வெந்தயம் காணப்படும்.எனவே வெந்தயத் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் முடி உதிர்வை எதிர்த்துப் போராடவும், வலுவான, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும் என கூறப்படுகிறது.
வெந்தய தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது
வெந்தய விதைகளை எடுத்து நன்றாக நன்றாக கழுவிய பின் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.இரவில் ஊறவைத்த பின்னர் தண்ணீரை ஒரு தனியாக வடிகட்டவும். பிறகு வெந்தயம் கலந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகி வரவும்.
புரதங்கள், வைட்டமின்கள் (ஏ, கே, சி) மற்றும் தாதுக்கள் (இரும்பு, பொட்டாசியம், கால்சியம்) போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.
வெந்தயம் உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது எனவே இதனால் முடி உதிர்வு கட்டுப்படுத்தப்படும்.