நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுடைய வேண்டுகோளிற்கினங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அவர்களின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு வீட்டிற்கு தலா 12 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கபடவிருக்கும் 105 வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன் ஆரம்பகட்ட நிகழ்வாக இன்றைய தினம் 105 வீடுகளுக்காக 210 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மாவட்ட செயலாளரிடம் இன்றைய தினம் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
அதே வேளையில் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த பண்டார அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)