E8 விசாக்களின் கீழ் கொரியாவில் விவசாயத் துறையில் வேலைக்கு அனுப்புவதற்காக 70 பேரிடமிருந்து பணம் பெற்று உரிமம் இல்லாத வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா – தொம்பே பிரதேசத்தில் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான பெண், ஒருவரிடமிருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கொரியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, வேலை பெற்று தராமல் இருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த ஐந்து முறைப்பாடுகளின்படி இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண், தும்பிய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என்பதுடன்,
அவரை இன்று பூகோட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.