கொரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டுகஸ்தோட்ட மருத்துவர் ஒருவர் பேராதனை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மவில்மடவை சேர்ந்த ஜயீட் ரவாயீதின் எனும் மருத்துவரே கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாக தீவிரகிசிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
பேராதனை மருத்துவமனையின் சுகாதார பணியாளர்கள் மருத்துவரை காப்பாற்றுவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர் ஆனால் அது பலனளிக்கவில்லை என மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அர்ஜூன திலகரட்ண தெரிவித்துள்ளார்.



