அரசாங்கம் கொரோனாவினை காரணம் காட்டி எந்தவொரு அபிவிருத்தித்திட்டத்தினையும் நிறுத்தவில்லை என நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே. ரவி தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு வீடு நிரமானிப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அத்திவாரம் அமைப்பதற்காக 150.000 ரூபா காசோளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வும் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.அவர்களின் தலைமையில் இன்று (18 திகதி இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கிராமசேவகர் பிரிவுகளில் வீடு இல்லாதவர்களுக்கு 20,000 வீடுகளை நிர்மானிக்கும் பணிகள் நாட்டின் பல பகுதிகளின் இடம்பெற்று வருகின்றன. எனினும் அம்பகமுவ பிரதேச செயலயகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் நிர்மானிப்பதற்கு காணிகள் பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலைமைகள் காணப்பட்டதனால் வீடுகள் நிர்மானித்துக்கொக்கும் பணிகள் தாமதமடைந்தன. இந்நிலையில் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தற்போது இந்த வீடு இல்லாதவர்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்துள்ளதனால் இப்போது வீடுகள் நிர்மானிக்க ஆரம்பித்துள்ளன.
அதே நேரம் தோட்டப்பகுதியில் இன்று பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் அமைச்சரின் வழிகாட்டலில் ஆரம்பித்துள்ளன.இதற்காக ஒரு உறுப்பினருக்கு 40 லட்சம் ரூபாவும் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 30 லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேளைத்திட்டங்கள் அடுத்த வருடம் முன்னெடுக்கப்படும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு அம்பகமுவ பிரதேச செயலயத்தின் இத்திட்டத்திற்கு பொறுபான உத்தியோகஸ்த்தர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்.