கொரோனாவை பயன்படுத்தி தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம். சென்கூம்ஸ் தோட்ட நிர்வாகத்திற்கு ராதாகிருஸ்ணன் எச்சரிக்கை.

0
162

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட சென்கூம்ஸ் தோட்டத்தில் கடந்த மாதம் 7ம் திகதியிலிருந்து ஒட்டுமொத்த ஊரும் முடக்கப்பட்டிருக்கின்றது. தோட்ட மக்களும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையால் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தோட்ட தொழிலாளர்களை வைத்து லாபத்தை ஈட்டி தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்ற பார்ப்பதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகின்ற போது…..

சென்கூம்ஸ் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 570க்கும் மேற்பட்ட குடும்பங்களில் தோட்டத்தொழிலாளர்களை தவிர ஏனையோருக்கு வெளியிலிருந்து கிடைக்கும் உலர் உணவு பொருட்களை தோட்ட நிர்வாகம் வழங்குகின்றது.ஆனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு மாத்திரம்  நிர்வாகத்தின் ஊடாக பொருட்களை வழங்கிவிட்டு சம்பளத்திலிருந்து அறவிட தோட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தோட்ட மக்கள் பலர் குறைபாடுகளை முன்வைத்துள்ளனர்.

இது அநாகரிகமான போக்காகும் வேலையின்றி சுயதனிமையில் இருக்கும் தோட்டத்தொழிலாளர்களை வைத்து தோட்ட நிர்வாகம் லாபம் தேட முயற்சிக்கும் செயலாகும்.எத்தனையோ வருடங்கள் நிர்வாகத்திற்கு லாபத்தை பெற்றுக்கொடுத்துள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு பொருட்களை இலவசமாக கொடுத்தால் கம்பனி ஒன்றும் நஸ்டமாகி விடாது.எனவே இவ்வாற போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே சென்கூம்ஸ் தோட்ட நிர்வாகம் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் பாரிய விளைவை எதிர்காலத்தில் எதிர்நோக்க வருமென வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here