கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மீண்டு வர நன்கொடை வழங்கி வரும் திரைப்பிரபலங்கள்.

0
213

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைகளுக்காக அதிக நிதி தேவைப்படுவதால் அதற்காக நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், இணையம் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, நடிகர் ரஜினிகாந்த 50 இலட்சம் ரூபாவையும், சன் குழும தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாவையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். அத்துடன், நடிகர் விக்ரமும் 30 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாவும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்களான அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாவையும், இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here