கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழப்பவர்களின் சடலங்களை எந்தவொரு மைய வாடியிலும் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா மரணங்களின் போது சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சு புதிய சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசெல குணவர்தனவின் கையொப்பத்துடன், குறித்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐந்தாம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அமுலாகும் வகையில் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.