கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்பவர்கள் காலம் முடிந்த பின் நற்றாற்றில் விடப்படுவதாக பொது மக்கள் விசனம்.

0
179

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்ட பின் அவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கும் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அரசாங்க செலவில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் ஏழு நாள் அல்லது எட்டு நாள் 10 முடிந்த பின் அவர்களாகவே வீடு செல்லுமாறு அனுப்பி வைக்கப்படுவதாகவும் இதனால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு மூன்று நாட்களுகளுக்கு முன் டிக்கோயா தோட்டத்தில் இருந்து கொரோனா மத்திய நிலையங்களுக்கு கொண்டு சென்றவர்கள் 10 நாள் முடிந்த பின் வீடு செல்லுமாறு அங்கிருக்கும் அதிகாரிகள் பணித்துள்ளனர். எனினும் அதிகமானவர்களிடம் சொந்த செலவில் தனியார் வாகனம் ஒன்றினை எடுத்து செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றன இந்நிலையில் ஒரு நபர் சுமார் 700 ரூபா செலவு செய்தே வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று இரவு கடவளை தோட்டத்தை சேர்ந்த 36 பேர் ஏழு நாட்கள் முடிந்த பின் வீடு செல்லுமாறு பணித்தாகவும் அவர்களுக்கு வீடு செல்வதற்கு வாகன வசதிகள் எதுவுமில்லாத காரணத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் சாப்பாடு கூட இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முதியவர்கள் சிறுவர்கள் உட்பட அனைவரும் முகம் கொடுத்ததாகவும் செய்வதறியாத நிலையில் மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் அவர்கள் ஊடாக நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஸ்ணனை தொடர்பு கொண்ட போது அவர் பஸ் ஒன்றினை பெற்றுத்தந்ததாகவும் இதனால் தான் அவர்கள் வீடு வந்து சேர்ந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஸ்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாத காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் தோட்டத்தில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதனால் பலர் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் காசு எதுவுமின்றியே கொரோனா தொற்று ஏற்பட்டால் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இவ்வாறு அழைத்து செல்பவர்களுக்கு வீடு திரும்புவதற்கு வாகன வசதிகள் செய்து கொடுக்கா விட்டால் அவர்கள் எவ்வாறு வீடு திரும்புவது, அப்படி பொது போக்குவரத்தில் வருவதென்றால் 14 நாட்கள் முடிவதற்குள் ஏனையவர்களுக்கு தொற்று பரவாத? அப்படி என்றால் இந்த தனிமைப்படுத்துவதில் என்ன பலன் இருக்கப்போகின்றது. என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எது எவ்வாறான போதிலும் தொற்று பரவலை தடுப்பதற்கு எடுக்கும் நடவடிக்கையினை விட நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் மாத்திரம் அக்கறையாக இருப்பதாகவும் அதனை தொடர்ந்து கைவிட்டு விடுவதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே இந்த நடவடிக்கைகள் குறித்து சரியான முறையில் பொது மக்களுக்கு விளக்கமளித்து அழைத்துச் செல்லப்பட வேண்டும் இது குறித்து சரியான நடைமுறைகள் பின்பற்றுவதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here