‘அவன் இன்றி அனுவும் அசையாது’ என்பது இந்துக்களின் நம்பிக்கை..இந்த நம்பிக்கைக்கிணங்க உலகமக்கள் பீடிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டும் என கோரி ஹட்டன் பிரச்சித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஆலயத்தில்;; விசேட யாக பூஜை விசேட பௌர்ணமி தினமான இன்று (24) திகதி கணபதி யோகி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நாடு மற்றும் நாட்டு மக்கள் பீடிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து விடுபற்று மக்கள வாழ எல்லாம் வள்ள இறைவன் அருள் புரிய வேண்டுமென விசேட பிராத்தனை யாகமும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து ஸ்ரீ ராஜராஜேவஸ்வர பெருமானுக்கு பால் தேன்,தையிர்,திருநீர்,வஸ்த்திரம்,திரவியம்,மலர் உள்ளிட்ட பொருட்களால் விசேட அர்ச்சனையும் இடம்பெற்றதுடன் ஜோதி அலங்கார பூஜையும் இடம்பெற்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நடைபெற்ற குறித்த யாகத்திலும் பூஜை வழிபாடுகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்களே சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய கலந்து கொண்டிருந்தனர்.இந்த பூஜை கலந்து கொண்ட அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்:டு பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டன.
இதே வேளை எதிர்வரும் தினங்களில் பொது மக்களிடையே இறை நம்பிக்கையினை அதிகரிக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பங்களிப்புடன் சிவஞான மந்திர கானமிர்தம் என்ற நூலும் கொழும்பில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இந்நூலினை எழுதிய கணபதியோகி தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்