”கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான் நானே”என யாழ்ப்பாண மாஜிஸ்திரேட் நீதவான் அந்தோணிசாமி பீட்டர் போல் பெருமிதம்!எந்நிலை சென்றாலும் தன்னிலை மறவாத தன்னிகரில்லாத மண்ணின் மைந்தனாகவும் நாட்டின் அடையாளமாகவும் எம்மனைவருக்கும் முன்மாதிரியாகவும் விளங்குகின்றார்.
தலவாக்கலை ஹோலிரூட் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் மனிதாபிமானம் உள்ள மனிதராகவும்,அனுபவமிக்க அரசியல் விஞ்ஞான ஆசிரியராகவும் , ,நுவரெலியா மாவட்ட சட்டத்தரணியாகவும் , அக்கரைப்பற்று நீதிபதியாகவும் பல்வேறு ஆற்றல் நிரம்பிய அனுபவமிக்க இளம் நீதிபதி பீட்டர் போல் மேலும் எமது தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்க எமது இதயபூர்வமான நல்வாழ்த்துகள்….
ஷான் சதீஸ்