கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் – வாட்ஸ்அப் செய்தி மூலம் அமைச்சர்களுக்கு அவசர அறிவிப்பு!

0
161

அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் நாளை (26) முதல் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஆனால், அதற்கான காரணம் குறித்து அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.கடன் மறுசீரமைப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில், அரசாங்க அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கொழும்பில் தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த பிரேரணையை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டியுள்ளதாக கருதி, எதிர்வரும் சனிக்கிழமை (01) நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

மேலும், லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை நாடு திரும்பியதையடுத்து, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here