கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு நகரில் உள்ள அரச மற்றும் அரசு அங்கிகாரம் கொண்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் தலைமையில் இன்று (18) காலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.