கொழும்பில் காதலர் தினத்தை முன்னிட்டு அதிகவான ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளை விட அதிகமான வாடிக்கையாளர்கள் ரோஜா பூக்களை கொள்வனவு செய்வதாக கொழும்பில் உ்ள பூக்கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.ஒரு சிவப்பு ரோஜா பூவின் மிகக் குறைந்த விலை 200 ரூபாயாகும். அலங்கரிக்கப்பட்ட சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 250 ரூபாவாகும்.
அதே நேரத்தில் சிவப்பு ரோஜாக்களின் பூச்செண்டிற்கு 8,000 முதல் 12,000 ரூபாய் வரை காதலர்கள் செலவிடுகின்றனர்.பல ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்துகளுக்கு சராசரியாக 10,500 ரூபாய் வரை செலவாகும் என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா உள்ளூர் ரோஜாவின் அதிகபட்ச விலை 400 மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோஜா 300 ரூபாய் என பூக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.கலப்பு பூக்கள் கொண்ட சாதாரண பூங்கொத்தின் குறைந்தபட்ச விலை 2,000 மற்றும் அதிகபட்ச விலை 4,500 ரூபாவாகும்.
ஒரு சாதாரண பூங்கொத்தின் சராசரி விலை 2,833 ரூபாய் என்று பூக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.