வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவில் இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆட்சிக்கு எதிராக இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களும் ஆதரவளிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.