கொழும்பில் பிரபல ஆடையகம் ஒன்றில் சலசலப்பு – வைரலாகும் காணொளி

0
110

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

கடையின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு துணிகளை வாங்க வந்த தம்பதிகள், வெளியில் வரும்போது வாகனத்தை தடுக்கும் வகையில் மற்றொரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்துள்ளனர்.

அதனையடுத்து அருகில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை மற்றைய வாகனத்தின் சாரதியிடம் வாகனத்தை எடுப்பதற்கு பல தடவைகள் கூறிய போதும் வாகனத்தை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட தம்பதிகள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

காலதாமதம் காரணமாக துணிகளை வாங்க வந்த வாடிக்கையாளருக்கும், ஆடையக ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் முறைபடபாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here