கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் வழமையாக காற்றின் தரக் குறியீடு 50 என்ற குறைந்த மதிப்பில் இருக்க வேண்டும் என்றும்ஆனால் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குறியீட்டெண் உயர்வினால் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்
அத்துடன் பாதகமான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் எல்லைகளுக்கு இடையேயான காற்று மாசுபாடுகள் இந்த நிலைமைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக அநுராதபுரம், யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 180 ஆக உயர்ந்ததாக அவர் கூறினார்.அத்துடன் வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், சுவாசக் கோளாறு உள்ள உணர்திறன் உடையவர்கள் இது குறித்து அதிக அக்கறை எடுத்து மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.