புதிய களனி பாலத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பு கண்டி பிரதான வீதியின் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை தொடக்கம் எதிர்வரும் 5ம் திகதி வரை பகல் மற்றும் இரவு நேரத்தில் அவ்வப்போது குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தபடும் என காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக , வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் காவற்துறையினர் கோரியுள்ளனர்.