புது விதமான கொள்ளையில் ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகள் ஈடுபட்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு வேளையில் ஹட்டன் நகரில் இருந்து மஸ்கெலியா நகருக்கு முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வந்த வேலையில் அவரது உடமை மற்றும் 48 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை முச்சக்கர வண்டியில் இருந்து இரங்கி தனது உடமைகளை எடுப்பதற்கு முன் முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியை நகர்த்தி கொண்டு சென்று உள்ளார்.
நடு இரவு என்பதால் நேற்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார் அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிபுரையில் விரைந்து செயல்பட்ட மஸ்கெலியா பொலிஸ் நேற்று அவரை கைது செய்து அவரிடம் இருந்த உடைமையை மீட்டுள்ளனர்.
இருப்பினும் பணம் கிடைக்க வில்லை இருந்த போதிலும் சந்தேக நபரை கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட போது எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டு உள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில் இரவு நேரத்தில் இவ்வாறு கொழும்பு மற்றும் பிற நகரங்களில் இருந்து வரும் பயணிகள் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.