கோட்டா பதவி விலகியதை கேட்டு அதிர்ச்சயடைந்த விசுவாசி செய்த காரியம்..!

0
185

கோட்டாபாய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததால், அதிர்ச்சியடைந்த 66 வயதுடைய நபர் ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொம்பே பிரதேசத்திலேயே இந்த தற்கொலை முயற்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகலை சபாநாயகர் இன்று உத்தியோகபூவமாக அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பு இன்று காலை ஊடகங்களில் வெளியானது.

நீண்டகாலமாக ராஜபக்ச குடும்பத்தை ஆழமாக நேசித்து வந்த நபர் கோட்டாவின் பதவி விலகலை தாங்கமுடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது.

அதேவேளை , கோட்டபாய பதவி விலகினால் தான் வாழமாட்டேன் என நேற்று முதல் பிரதேசவாசிகளிடம் தெரிவித்துவந்த நிலையில் இன்றைய தினம் , கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற நிலையில், வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அதேவேளை தற்கொலைக்கு முயன்றவரின் மகன், அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், பல நாட்களாக கொழும்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்து மகனுக்கும் தந்தைக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகலை பொலிஸார் மேற்கொள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here