கோதுமை மா விலையும் உயர்த்தப்பட்டது???

0
179

இலங்கையின் முன்னணி கோதுமை மா விற்பனை நிறுவனமாகிய பிரீமா தனது உற்பத்திக் கலவையில் ஒன்றாகிய மில்க் பிரேண்ட் என்ற மா விலையை 3 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.இன்று தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலில் உள்ளதாக அந்த நிறுவனம் கூறுகின்றது.

அதனடிப்படையில் 50 கிலோ பிரீமா மில்க் பிரேண்ட் மாப் பொதியின் விலை 4175 ரூபா என்றும், ரொட்டி செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மில்க் பிரேண்ட் என்ற மாப் பொதி அதிகமாக பேக்கரி நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here