க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியகியுள்ளது.இப்பெறுபேறுகளை நோக்கும் போது பெறுமையளிப்பதாக இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் கஸ்டப்பட்டு படித்து மாணவ செல்வங்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.குறிப்பாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலும் வீட்டிலிருந்தவாரே பெற்றோரினதும் ஆசிரியர்களினிதும் முழுமையான ஒத்துழைப்பே இவ்வாறான பெறுபேறுகள் கிடைப்பதற்கு காரணம்.இணைய்வழி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தமையினால் எமது தோட்டப்புறங்களில் மாணவர்கள் சிக்னல் பிரச்சனை உட்பட இணையங்கள் பயன்படுத்துவதற்கான வசதிகள் இன்றி பெரிதும் அவதியுற்றதை காணக்கூடியதாக இருந்தது ஆனால் அவர்கள் கஸ்டப்பட்டது வீண்போகவில்லை.இன்று குடும்பத்திற்கும்,கற்ற பாடசாலைக்கும்,சமூகத்திற்கும்,நாட்டிற்கும் நற்பெருமையை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சித்தியடைய தவறிய்வர்களும் ஒருபோதும் கலங்க கூடாது யாவருக்குமே பல தோல்விகள் தான் வெற்றியின் கதவாக இருக்கின்றன.எனவே தொடர்ந்தும் முயற்சியுங்கள் வெற்றி உங்கள் வசப்படும்.
வெளியாகிய கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சையின் மூலம் எம் மலையக சமூகத்தை தலைமிர வைத்த மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்தார்.
நீலமேகம் பிரசாந்த்