லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சகல தோட்ட பகுதிகளில் இயங்கும் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று நேற்றைய தினம் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
பொலிஸ் சிவில் பாதுகாப்பு அமைச்சர் திவுனு அமுனுகமவின் வழிகாட்டலில் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு பிரிவு இனிவரும் காலங்களில் கூடிய பொறுப்புகளுடன் இயங்க உள்ளதாக லிந்துலை சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி உறுபினர்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார்.
மேலும் லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டசகல கிரமசேவர் பிரிவுகளிலும் தலா ஒரு பொலிஸ் காவலரன் அமைக்கபடஉள்ளதாக இதனால்தோட்டபகுதிகளில் சிறுசிறு பிணக்குகளை அந்தந்த கிரமசேவர் பிரிவுகளில்அமைக்கப்படும் காலரன்களில் விசாரணை செய்யப்பட உள்ளதாகவும்,இதக்காக சிவில் பாதுகாப்புஉறுப்பினர்களை இணைத்து கொள்ள படுத்தத்உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக புதிய பொறுப்பதிகாரியான கடைமைகளை பொறுப்பேற்றுள்ள சிசிர அவர்களுக்கு சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இனி வரும் காலங்களில் பொலிஸ் சிசில் பாதுகாப்பு குழுக்கள் கடுமையான பொறுப்புக்களுடன் இயங்க தமது வாழ்த்துகளை புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
செய்தி-பா.பாலேந்திரன்