மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் தனது சகோதரி உறவு முறையான 14 வயதுடைய சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ள 25 வயதுடைய நபர் ஒருவரை மடூல்சீமை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கர்ப்பமடைந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை ஹொப்டன் பகுதியில் அடையாளம் கண்ட பொலிஸார் சிறுமியை விசாரணைக்கு உட்படுத்திய போது 25 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.