ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த ஆசிய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை இந்திய அணியின் ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குமார சங்கக்கார 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 244 ஓட்டங்களைக் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.
அந்த சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 252 ஓட்டங்களைக் குவித்து ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.