சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரணில் விக்ரமசிங்க நியமனம்!!

0
141

புதிய அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய பொலிஸ் துறைக்கு பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக பதவி வகித்த லக்ஷ்மன் கிரியெல்ல அரச நிறுவனங்கள் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக கபீர் ஹசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக பதவி வகித்து வரும் ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரவிந்திர சமரவிக்ரம வனஜீவராசிகள் மற்றும் ஸ்திரமான அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பியசேன கமகே இளைஞர் விவகாரம் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல ரத்நாயக்க இளைஞர் விவகாரம் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜே.சீ.அலவத்துவல நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ச டி சில்வா தேசிய கொள்கை மற்றும் பொருளாதா விவகார ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பீ பெரேரா, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here