பசறை மீதும்பிடி கலபொட டிவிஷனில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டுவதாக விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பசறை பொலிஸாரும் விஷேட அதிரடி படையினரும் இனைந்து மீதும்பிடி கலபொட டிவிஷனில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டுவதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை சுற்றி வளைத்தனர். இதன்போது 37,34,32,28 வயதுகளையுடைய 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் நால்வரையும் பசறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் மீதும் பிடி கலபொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.