சட்டவிரோத ஜீப்புடன் ஒரு சந்தேக நபரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது இந்த ஜீப் மீட்கப்பட்டது.
பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முல்லேரியா பொலிஸ் பிரிவின் ஹிம்புதான பகுதியில் நேற்று (14) பிற்பகல் சோதனை நடத்தப்பட்டது.
ஜீப்பை வைத்திருந்த 53 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.