மலையக பகுதியில் உள்ள சத்தொச மற்றும் நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடும் அத்தியவசிய பொருட்கள் தட்டுப்பாடு காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றன.
அரசி,சீனி,கோதுமை மா.பருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும். இந்த பொருட்கள் உள்ள ஒரு சில கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஒரு சில சத்தொச மற்றும் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருக்கும் ராக்கைகள் மற்றும் கொள்கலனகள் வெற்றாக காணப்படுவதாகவும் இதனால் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக செல்லும் பாவனையாளர்கள் பெரும் சிரமமப்படுவதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கு கட்டுப்பாடு விலைகள் விதித்திருந்த போதிலும் ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, பொகவந்தலா, நோர்வூட் மஸ்கெலியா உள்ளிட்ட பல பிரதான நகரங்களில் கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்கள் விற்பனை செய்துவருவதாகவும் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் செய்திகளுக்கும்,வாய் வார்த்தைகளுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்.
இது தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பொது மக்கள் நியாயத்தினை பெற்றுத்தர ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவஞ்ஞன்