சந்தையில் கலப்படம் செய்யப்பட்டு 1,600 ரூபா வரை விற்பனையாகும் மிளகாய் தூள்!

0
147

சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் மிளகாய் தூளில் கோதுமை மா, உப்புத்தூள் மற்றும் வர்ண தூள்கள் என்பன கலக்கப்படும் சம்பவங்கள் அதிகளவு பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தையில் ஒரு கிலோகிராம் மிளகாய் தூள் 1,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 40 சதவீதம் வரையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் மிளகாய் தூளின் விலை அதிகரித்துள்ளமையினால், அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக வர்த்தகர்கள் இவ்வாறான மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here