சபரிமலை தங்​கம் கொள்ளை – சென்னை தொழில​திபர் உட்பட இருவர் கைது

0
3

சபரிமலை தங்​கம் கொள்ளை வழக்​கில் சென்னை தொழில​திபர் உட்பட இருவர் கைது செய்​யப்​பட்டுள்​ளனர்.

கேரளாவின் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் துவார பால​கர் சிலைகளின் தங்க கவசம் மற்​றும் கதவு நிலைகளில் பதிக்​கப்​பட்​டிருந்த தங்க தகடு ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதுதொடர்​பாக எஸ்​ஐடி விசா​ரணை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்​கில் திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு முன்​னாள் தலை​வர் பத்ம குமார் உட்பட எழுவர் கைது செய்​யப்​பட்​டனர்.

வழக்கு விசா​ரணை​யின்​போது சபரிமலை ஐயப்​பன் கோயில் துவார பால​கர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்​னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறு​வனத்​தின் தலைமை செயல் அதி​காரி பங்​கஜ் பண்​டாரி நேற்று கைது செய்​யப்​பட்டார்.

துவார பால​கர் சிலைகளில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்​கத்தை கர்​நாட​கா​வின் பெல்​லாரியை சேர்ந்த ஜூவல்​லரி உரிமை​யாளர் கோவர்​தன் வாங்​கிய​தாக குற்​றம் சுமத்தப்​பட்டுள்​ளது.

இந்நிலையில் அவரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இருவரையும் அதிகாாிகள் திரு​வனந்​த​புரத்​துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here