இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தும்படியும், மக்களின் உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியும் மாத்தளை நகரத்தில் 18.11.2018 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத்தளை பிரதேச சபை தலைவர் கபில பண்டார கேன்தெனிய, உறுப்பினர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு மாத்தளை நகரத்தில் ஊர்வமாக சென்று பட்டாசு வெடித்து சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன்