சமதான முயற்சியில் சவூதி அரேபியா!

0
4

பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற முறையில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் சீனவும் சவூதி அரேபியாவும் முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏற்பட்ட மோதலினால் மூடப்பட்ட பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக பாகிஸ்தான் ருடே (pakistantoday) என்ற ஆங்கில நாளிதழ் இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் மட்டுமே பிராந்திய அமைதியை அடைய முடியும் என்று ஆசிப் வலியுறுத்துகிறார்

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரும் பயங்கரவாதத்தை இரண்டு அயல் நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களின் முதன்மை ஆதாரமாக ஒப்புக்கொள்கிறார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை சீனாவும் சவூதி அரேபியாவும்  வரவேற்றுள்ளன, இரு நாடுகளும் தங்கள் பகிரப்பட்ட எல்லையில் தீவிரவாதத்தை கூட்டாக எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு தீவிரவாதம் பெரும் தடையாக இருக்கும் என்று இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அல்-ஜசீரா (aljazeera) தெலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்துக்கும் காபூலுக்கும் இடையிலான பதட்டத்தின் முதன்மையான ஆதாரம் தீவிரவாதம் என்பதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக்கொண்டதாகவும் கூறிய அவர், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக இரு அரசாங்கங்களும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் எனவும் அமைச்சர் கவாஜா அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதலை இந்திய நன்கு பயன்படுத்த முற்படும் வேளையில் சீன – சவூதி அரேபிய நாடுகள் கூட்டாக இணைந்து, இரண்டு நாடுகளையும் மீண்டும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அல்-ஜசீரா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகள் நிச்சயம் இணைந்து பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அல்-ஜசீரா மேலும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here