சமந்தா வருகையால் கடலென திரண்ட இளைஞர்கள் கூட்டம்

0
182

நடிகை சமந்தா கடப்பாவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார்.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் ஆந்திரா மாவட்டம் கடப்பாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலை நேற்று திறந்து வைத்தார். இதற்காக அந்த ஷாப்பிங் மால் நிறுவனம் நகர் முழுவதும் கட் அவுட் மற்றும் பேனர்கள் வைத்திருந்தது.

இதையடுத்து திறப்பு விழாவுக்கு வந்த சமந்தாவைக் காண்பதற்காக கடலென இளைஞர்கள் கூட்டம் திரண்டுள்ளது. இதனால் மொத்த கடப்பா நகரமே திரண்டு கடைக்கு முன்னர் வந்து நின்றது போன்ற ஒரு தோற்றம் உருவானது. கடையைத் திறந்து வைத்து சமந்தா பேசிவிட்டு சென்றதும் கூட்டம் குறைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here