லிந்துலை சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி தாரணி மகேந்திரன் தலைமையில் நேற்றைய தினம்(14) லிந்துலை ராணிவத்தை கிராம பிரிவில் பம்பரகலை தொழிற்சாலை பிரிவில் திறந்து வைக்கப்பட்டது.
அதிகளவான சமூர்த்தி பயனாளிகள் காணப்படுகின்ற இப்பகுதியில் சிறந்த சமூர்த்தி பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் இவ் சமூர்த்தி காரியலயத்தின் உடாக ராணிவத்தை,இல்டோன்ஹால் கிரமசேவர் பிரிவுகளை சேர்ந்த சமூர்த்தி பனாளிகள் மற்றும் ஏனைய பனாளிகளும் பயன்பெற கூடிய வகையில் லிந்துலை பம்பரகலையில் திறக்கபட்டுள்ளதாக லிந்துலை சமூர்த்தி முகாமையாளர் உறையாற்றினார்.
மேலும் சமூர்த்தி உத்தியோகத்தர் குணசேகரன் உரையின் உறையின் போது இப்பகுதியில் வாழும் சகலரினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு புதிய காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தோட்ட வைத்தியஅதிகாரி உறையின் போது சமூர்த்தி பயனாளிகளின் வசதிகளை கருத்தில்கொண்டு பொது மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் சிரமமின்றி பெற்றுகொள்ளவேண்டும்,நாட்டின் அபிவிருத்தியில் பொதுமக்கள் பங்களிப்பு மிக முக்கியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
தோட்ட அதிகாரிகள்,தோட்ட வைத்தியர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர்,தோட்ட வெளிகள உத்தியோகத்தர், தோட்டநலன்புரி உத்தியோகத்தர்,சிறுவர் நிலைய ஆசிரியர்கள், சமூர்த்தி பயனாளிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பா.பாலேந்திரன்