கொரோனா சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 5000 ரூபா கொடுப்பனவு நேற்றும், நேற்று முன்தினமும் (17,18/04/2021) லிந்துலை சமூர்த்தி வங்கியின் ஊடாக சமூர்த்தி உத்தியோகத்தர் மூலம் இரண்டாம் கட்டமாக சமூர்த்தி பயனாளிகளின் காத்திருப்பு பட்டியலில் உள்வாங்கபட இருக்கின்ற குடும்பங்களுக்கு 475/டி, 475/யு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட தோட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சமூர்த்தி உத்தியோகத்தர் குணசேகரன் தலைமையில் வழங்கப்பட்டது.
இக்கொடுப்பனவானது சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மூலமாக மாத்திரமே வழங்கப்படுகின்றது.
இக்கொடுப்பணவின் போது போலி பிரச்சாரங்கள், அதிகாரிகளை அச்சுருத்தும் வகையில் நடந்துகொள்ளும் நபர்கள் சம்பந்தமாக பொலிஸார் விஷேட குழுக்கள் ஊடாக கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாலன்