சமைப்பதற்கு எரிவாயு இல்லை, விறகு தேடிச் சென்றவர் மரணம்

0
178

ஹம்பாந்தோட்டை, சமரகோன்வெவ பிரதேசத்தில், தனது குடும்பத்துடன் விறகு வெட்டிக் கொண்டிருந்தபோது, மிருகங்களுக்கு வைக்கப்படும் பொறிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் வீட்டில் சமையல் எரிவாயு இல்லாமை காரணமாக தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு ஹம்பாந்தோட்டை, சமரகோன்வெவ ஆற்றுப் பிரதேசத்தில் விறகுகளை வெட்டிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை சமரகோன்வெவ பகுதியைச் சேர்ந்த 25வயதான திலிப் சாமர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்வரின் சகோதரரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here