சமையல் எரிவாயு கொள்கலன் எந்த இடத்திலும் வெடிக்கவில்லை.

0
240

இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் கருத்தின்படி, கடந்த சில நாட்களில், எந்த இடத்திலும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு இடம்பெறவில்லையென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு தொடர்பில் வெளியாகும் தகவல்குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(27) சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், இந்த விடயம்குறித்து ஆராய்வதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here