மஞ்சள் நிறத்தில் உள்ள லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர்களை நீல நிறத்தில் மாற்றுவதற்கு லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடவத்தை அதிவேக வீதி நுழைவு வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சிலிண்டர் லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, மஞ்சள் நிற லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர்களில் நீல நிறம் பூசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.