சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பான கோரிக்கை

0
197

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலையை 700 ரூபாவினால் அதிகரிப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாததுடன், முன்வைக்கப்பட்டுள்ள விலை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினரால் ஊடாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பது தொடர்பில் விரிவான ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளர்.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here