ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பெருதோட்ட தொழிலாளர்களின் சம்பளவுயர்வு கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாக கடிதமூலம் அறிவித்துள்ளதாகவும் தொழிலாளர்சம்பளவுயர்வு கோரி இலங்கை தொழிலாளர் காங்ரஸினால் முன்னெடுக்கப்படும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் தமது ஆதரவினை நல்குவதாகவும் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளவுயர்வு கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் பலச்சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும் எவ்வித இனக்கப்பாடும் எட்டப்படவில்லை எனவே தொழிற்சங்கங்ளின் பலம் அவசியமாகின்றபடியால் அரசியல் தொழிற்சங்க முரண்பாடுகளை மறந்து அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் ஆதரவினை வழங்கவேண்டும் மலையக தொழிற்சங்கங்களின் கருத்து வேறுபாடுகள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு ஏதுவாக அமைந்து விடக்கூடாதொன்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா