நோர்வூட் பிரதேசசபையில் 18.10.2018.வியாழகிழமை காலை 10மணிக்கு ஆரம்பிக்கபட்ட சபை அமர்வு 10.05க்கு நிறைவடைந்தமை குறித்து நோர்வூட் பிரதேசசபையின் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதேசசபை உறுப்பினர்கள்
சபையின் கதிரையின் மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
18.10.2018.வியாழக்கிழமை டிக்கோயா புளியாவத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபா அடிப்படை சம்பளம் கோறி ஆரபாட்டத்தில் ஈடுபட்டமக்களோடு கறுப்பு பட்டி அணிந்த தமிழ் முற்போக்கு கூட்டனியின் நோர்வூட் பிரதேசபை உறுப்பினர்கள் 07பேர் கலந்து கொண்ட வேலை குறித்த சபை அமர்வு 10மணிக்கு ஆரம்பிக்கபட்டு 10.05மணி அளவில் சபையை நிறைவு செய்ததாக கூறி தமிழ் முற்போக்கு கூட்டனியின் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர்கள் அவர்கள் சபைக்கு வருவதற்கு முன்பு சபை தலைவர் சபையை நிறைவு செய்து குறித்த உறுப்பினர்களின் வருகை புத்தகத்தில் கையொப்பம் இட மறுப்பு
தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துவெளியேறியதாக குற்றம் சுமத்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது குறித்த நோர்வூட் பிரதேசசபை பிரதேச மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதற்க்கே உறுவாக்கபட்டது ஆனால் இந்த சபை இலங்கை தொழிலாளர் காங்ரசின் சொந்தசபையாக இயங்குவதாகவும் சபையின் செயலாளர் இலங்கை தொழிலாளர் காங்ரசின் பக்க சார்பாக செயல்படுவதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதேசசபை உறுப்பினர்கள் மேலும் குற்றம் சுமத்தினர்.
இதேவேலை இலங்கை தொழிலாளர் காங்ரசை பிரதிநிதித்துவம்படுத்துகின்ற நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் கறுப்பு நிற சட்டையை அணிந்து கொண்டு தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையின் எதிர்ப்பினை காட்டும்
வகையில் நடகத்தினை அரங்கேற்றுவதாக மக்கள் மத்தியில் புச்சாண்டி காட்டுவதாக தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதேசசபை உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்
இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது கருத்து தெரிவித்த நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் பா.சிவநேசன் இந்த பிரதேசசபை உருவாக்கபட்ட காலபகுதியில் இருந்து தொழிற்சங்கம் சார்ந்த காரியாலயம் போன்று செயற்பட்டு வருகிறது
பெறுந்தோட் தொழிலாளர்களின் வாக்குகளில் அமைக்கபட்ட இந்த சபையில் தொழிலாளர் உரிமை சார் அபிவிருத்தி விடயங்களை பேசுவதற்க்கு கூட முடியாத நிலைகானபடுகிறது இன்று சபை அமர்வுக்கு வருகை தந்து கொண்டிருந்த போது
புளியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 1000கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு போராட்டத்தில் ஹட்டன் புளியாவத்தை பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வழியில் வந்த முற்போக்கு கூட்டனியின் உறுப்பினர்களாகிய நாங்கள் வந்த உரிமை போராட்டத்தை ஊதாசினம்படுத்த முடியாத நிலையில் அந்த பேராட்டத்தில் பங்கேற்று 10.05மணி அளவில் சபைக்கு வருகை தந்தோம் அவ்வேலையில் 05 நிமிடங்களில் சபை ஒத்திவைக்கபட்டு வருகை தந்த எமக்கு வருகை பதிவு ஏட்டில் கையொப்பம் இடவும் மறுக்கபட்டதாக தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் பழனிவேல் கல்யானகுமார் கறுப்புசட்டை அணிந்து தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுகொடுக்க முடியுமென ஒரு சிலர் கபடநாடகம் ஆடுகின்றனர் இந்நிலையில் தொழிலாளர் சம்பள
உயர்வு கோறி நடத்திய ஆரபாட்டத்தில் உறுப்பினராகிய நாங்கள் கலந்து கொண்டமைக்கு பழிவாங்கு வகையிலேயே இன்று சபை அமர்வில் கையொப்பம் இட மறுக்கபட்டுள்ளது இதேவேலை கடந்த காலங்களில் இடம் பெற்ற சபை அமர்வின் போது
இ.தொ.கா.உறுப்பினர்கள் நேரம் கடந்த நிலையில் வருகை தந்த போதும் சபை தலைவரும் செயலாளரும் அவர்களுக்கு அனுமதி வழங்கினர் ஆனால் தொழிலாளர்கள் உரிமை போராட்டத்தில் கலந்து கொண்டுஐந்து நிமிடம் தாமதமாகியதற்கு தமிழ்
முற்போக்கு கூட்டனியின் 07உறுப்பினர்களுக்கு கையொப்பம் இட மறுக்கபட்டதை வண்மையாக கண்டிப்பதோடு இதற்கான தற்கபதிலை தொழிலாளர் சமூக அமரவில் காட்டவேண்டும் என அவர் தெரிவித்தார்
இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் கருத்து தெரிவிக்கையில் இன்றைய சபை நடவடிக்கை மூன்று காரணங்களை மையபடுத்தி பிற்போடபட்டுள்ளது நோர்வூட் நிவ்வெளிபிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தம்
தொடர்பிலான விஷேடகலந்துரையாடல் , தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கலந்துரையாடல், சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையின் திடீர் மரணம் தொடர்பிலான மூன்று விடயங்களை கொண்டு இன்றைய சபை நடவடிக்கை 10மணிக்கு
ஆரம்பிக்கபட்டு எதிர்வரும் 14ம் திகதி வரை சபை ஒத்திவைக்கபட்டது தொழிலாளர்களின் சம்பள உயர்வு வேண்டி கருப்பு ஆடைகளை அணிந்து சபைக்கு வருகை தந்திருந்தோம் இந்நிலையில் 17நிமிடங்கள் கழித்து சபைக்கு வருகை
தந்த ஒரு சிலர் உறுப்பினர்களின் அரசியல் நாடகத்தை ஏற்கமுடியாது என குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)