ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள முறண்பாட்டினை தீர்க்க கோரியும் மாணவர்களுக்கு ஒன்லைன் வசதிகள் செய்து கொடுக்க கோரியும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06) காலை போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர் அதிபர்களின் தொழில் கௌரவத்தை கெடுக்காதே, ஒன்லைன் கல்விக்கு தேவையான வசதிகளை வழங்கு, பிள்ளைகளின் கல்வி உரிமையினை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்திய வண்ணம் கோசமிட்டனர்.
போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்
1997 ஆண்டு முதல் ஆசிரியர்களின் சம்பள பிரிச்சினை தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது இதனால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த 84 நாட்களுக்கு மேல் ஆசிரியர்கள் ஒன் லைன் கற்றலில் இருந்து விலகியிருந்து பல்வேறு போராட்டங்கள் செய்த போதிலும் இதுவரை இதற்கு தீர்வு கிட்டவில்லை.
நாட்டின் இலவச கல்வியினை பாதுகாப்பதற்காகவும், தேசிய வருமானத்தில் ஆறு சதவீதத்தினை கல்வி ஒதுக்குமாறு கோரியும், 34 சதவீதமான உள்ள ஒன்லைன் கல்வியினை நூறு சதவீதமாக மாற்றக்கோரியும், சுதந்திர கல்வியினை பாதுகாக்க கோரியுமே சுமார் மூன்று மாதகாலமாக போராடி வருவதாக இவர்கள் தெரிவித்தனர்.
மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் அதிபர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொணடிருந்ததுடன் சுகாதா பொறிமுறைகளுக்கு அமைய தனிமைப்படுத்தும் சட்ட விதிகளை பின்பற்றி நடைபெற்றன.
இதன் போது அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
கே.சுந்தரலிங்கம், க.கிஷாந்தன்