சர்வகட்சி மா நாட்டில் பங்கேற்க வேண்டாம். மலையக தொழிலாளர் முன்னணி கோரிக்கை.

0
190

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அரசாங்கம் அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துவிடுத்துள்ளது.இந்நிலையில் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க வேண்டாமென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஸ்ணனுக்கு கட்சியின் முக்கிய உறுப்பினர்களூடாக கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அது சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் கலந்தாலோசித்து தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.மக்கள் அன்றாடம் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.நாட்டையும் நாட்டு மக்களையும் சீர்குழைத்து நாட்டை சுடுகாடாக்கி வைத்திருக்கும் இவ்வரசாங்கம் வெளியேற வேண்டுமே தவிர சர்வகட்சி மாநாட்டை கூட்டி எவ்வித பிரயோசனமும் கிடையாது.

எனவே மலையக மக்கள் முன்னணி பங்கேற்க கூடாதென மலையக மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்களால் மலையக மக்கள் முன்னணிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here