சர்வதேச அளவிலான பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்து சாதித்த யாழ். இளைஞன்!

0
148

சர்வதேச அளவிலான பேசு தமிழா பேசு பேச்சு போட்டியில் யாழை சேர்ந்த மோகன்ராஜ் ஹரிகரன் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின் ஏற்பாட்டில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் அனுசரணையில் நடைபெற்ற அனைத்து உலக ‘பேசு தமிழா பேசு போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த 48 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பபீடத்தை சேர்ந்த 4ஆம் ஆண்டு மாணவன் மோகன்ராஜ் ஹரிகரன் பங்கேற்றிருந்தார்.

6அவது தொடராக – நடைபெற்ற இந்தப் பேச்சுப் போட்டி நிகழ்நிலை வாயிலாக நடைபெற்றது. மேலும், இதன் இறுதிப் போட்டி கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்றது.

இந்த போட்டியில், மோகனராஜ் ஹரிகரன் முதலாம் இடத்தைப் பெற்று சர்வதேச பேசு தமிழா பேசு போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை தன் வசமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here