சர்வதேச ஆசிரியர் தினத்தினை துக்கதினமாக அனுஸ்ட்டித்து வீடுகளில் கறுப்பு கொடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்தார்.ஆசியரின் தினம் குறித்து இன்று (05) தலவாக்கலை பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
ஆசிரியர்கள் இன்று 84 நாட்களுக்கும் மேலாக சம்பள முறண்பாட்டினை தீர்க்க கோரி ஆசிரியர்கள் அதிகர்கள் போராடி வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு நியாயமான தீர்வு எதுவும் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
ஆசிரியர்களை பொறுத்த வரை ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த சம்பளத்தினையே பெறுகிறார்கள்.ஏனைய துறைகளை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவும், போக்குவரத்து கொடுப்பனவும், வாகன வசதிகள், வீட்டு வசதிகள் என இன்னொரண்ண கொடுப்பனவுகள் உள்ளன ஆனால் ஆசிரியர்களும் அதே சேவையினை செயகின்ற போதிலும்.
அவர்களுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளும் கிடைப்பதில்லை. அவர்களும் பாடசாலை முடிந்த பின் மேலதிக வகுப்புக்களை செய்கிறார்கள் இந்நிலை காரணமாக இன்று ஆசிரியர்கள் மனம் முடைந்து போய்யுள்ளார்கள் ஒரு பிள்ளையின் தேவையினை பூர்த்தி செய்வது பெற்றோர்களின் கடமை ஆசிரியர்களின் தேவையினை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமை ஆகவே எங்களுடைய குறைகளை நாங்கள் அரசாங்த்திற்கு தான் சொல்ல முடியும் ஆகவே உடனடியாக தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.
அவர் அங்கு தொடரந்து கருத்து தெரிவிக்கையில்……
ஆசிரியர்கள் இன்று உரிமையை இழந்துள்ளார்கள் சுதந்திரத்தினை இழந்துள்ளார்கள் நியாயமான போராட்டத்திற்கு இது வரை தீர்வு கிடைக்கவில்லை. இதன் அடியாளம் என்னவென்று பார்ப்பீர்களாகயிருந்தால் அது தான்ட துக்கம் ஆகவே சர்வதேச ஆசிரியர் தினத்தினை ஒரு துக்க தினமாக அனுஸட்டிக்க எங்களுடை தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.அதற்கமைய நாங்கள் நாளை தினம் அதன் அடையாளமாக ஆசிரியர்களின் விடுகளில் கறுப்பு கொடி ஒன்றினை காட்சிப்படுத்தி துக்க தினமாக அனுஸ்ட்டிக்கமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். அதற்கமைய பெற்றோர்களும் எமக்காக ஒரு கறுப்புக்கொடியினை ஏற்றி குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு அலுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் போராட்டம் செய்ததன் காரணமாக பாடசாலை மூடப்படவில்லை கொரோனா தொற்று காரணமாகவே தான் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள காலத்திலும் கூட ஆசிரியர்கள் தாமாவே முன்வந்து ஒன் லைன் ஊடாக கற்றபித்தலை மேற்கொண்டுள்ளார் இந்நிலையில் அவர்களின் வாழ்க்கை சுமை காரணமாக கடன் தொல்லை காரணமாகவுமே ஆசிரியர்கள் தங்களது ஒன் லைன் கற்றலிலருந்து ஒதுங்கியுள்ளார்கள் ஆகவே நியமான போராட்டத்தினை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முழு தேசத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கின்ற இந்த ஆசிரியர்களின் வாழ்க்கை இன்று இருளை நோக்கி போய் கொண்டிருக்கிறது.
அரச சேவையில் உள்ளவர்களில் மிகவும் குறைந்த சம்பளத்தினை ஆசிரியர்கள் தான் பெற்று வருகின்றனர் இதனால் இவர்கள் இன்று கடனாளியாகி சமூகத்தில் அந்தஸ்த்து குறைந்துள்ளன. இந்நிலை காரணமாக எதிர்காலத்தில் எவரும் ஆசிரியர் தொழிலுக்கு வராத ஒரு நிலையே காணப்படும். இதனால் இந்த துறை மிக மோசமான துறையாக மாறினால் ஏழை பெற்றோர்களின் பிள்ளைகள் தான்; பாதிப்படைவார்கள் பணம் படைத்தவர்கள் அவர்களின் பிள்ளைகளை தனியார் பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வியினை பெற்றுக்கொடுப்பார்கள் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
எனவே ஜனாதிபதி அவர்களும் அரசாங்கமும் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
கே.சுந்தரலிங்கம்