சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா நவசக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி மண்டபத்தில் (19/04/2022) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இத்தொடக்க விழாவில் இந்திய உயர் முக்கியஸ்தர்கள் மற்றும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் செந்தூர் பாண்டியன், முன்னிலையில் மலையக கலாசார ஒன்றியத்தின் செயலாளரும்,
வணிக உலக சர்வதேச அமைப்பின் இலங்கைக்கான இயக்குனருமான ரகு இந்திரகுமார் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது நூறு குடும்பங்களுக்கான குடும்ப நலத்திட்ட உதவிகளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இளைஞர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் மலையகமெங்கும் கலாம் அறக்கட்டளை ஊடாக முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென ரகு இந்திரகுமார் குறிப்பிட்டிருந்தார்.
நீலமேகம் பிரசாந்த்