சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பெருந்தோட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை முதல் இடம்பெற்றன. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரப்பத்தனை பச்சை பங்களா தோட்டத்தில் இயங்கும் பிரிடோ முன்பள்ளி ஆசிரியர்களின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு இன்று (01) தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிறுவர்கள் தங்களுடைய உரிமைகளை கோரி பதாதைகளை ஏந்தியவாறு உடன் முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்கள் சிறுவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர் அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் ஆசி வேண்டி தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் விசேட பிரார்த்தனை இடம்பெற்று நாட்டில் அனைவருக்கும் சாந்தி சமாதானம் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து நாடு சுபிட்சம் பெற வேண்டியும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ தீப நாதன் குருக்கள் அவர்களால் பூஜைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது அத்தோடு அக்கரப்பத்தனை தோட்ட நிர்வாகமும் சிறுவர் தின கொண்டாட்டத்தை முன்னெடுத்தது இதன்போது சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சித்திரப் போட்டி இடம்பெற்றதுடன் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறுவர்களை ஊக்கப்படுத்திய விசேட அம்சமாகும்
கே.சுந்தரலிங்கம்.